எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேரை டியாகோ கார்சியா கடற்படையினர் கைது செய்தனர்.
தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 மீனவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது டியாகோ கார்சியா தீவின் எல்லையை கடந்து அவர்கள் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்நாட்டு கடற்படையினர் கடந்த 9-ஆம் தேதி மீனவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள், மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.