பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக – கேரள எல்லையில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.