தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தோரணமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் வில்லிசை முழங்க பக்தர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
விழாவின்போது பம்பரம் விடுதல், கோலி குண்டு அடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை பள்ளி மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், மார்கழி மாத பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.