தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை வாகனங்கள் ஊர்ந்த படியே பயணிக்கின்றன. மேலும், இடையிடையே மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.