சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்துள்ளார்.
அத்துடன் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அணி பிப்ரவரி 22-ம் தேதி இங்கிலாந்தையும், பிப்ரவரி 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவையும், 28-ம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.