தென்காசியில் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலே எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, வீடுகள் முன்பு வண்ண கோலமிட்டு, குத்துவிளக்கேற்றி புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.
அப்போது, பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என கூறி குலவையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .