கலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்ததை எண்ணி தமது இதயம் வலிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்து வருவதாகவும், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வான் மற்றும் தரை வழியாக மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.