பொங்கல் பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் சென்னையின் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னையில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தவாறு சென்று பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இதனால் எப்பொழுதுமே பரபரப்பாகவும், கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் அண்ணாசாலை, அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.