சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கர்களின் தரவுகளை பாதுகாக்கும் பொருட்டு, டிக் டாக் செயலியை அமெரிக்காவுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு விற்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனம் முடிவெடுக்க வரும் ஜனவரி 19-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
அதன் பின்னர் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்பட அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒரு வாரத்துக்கும் குறைவான காலமே உள்ளதால், டிக் டாக் செயலியை எலான் மஸ்க் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலி ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.