பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் மூன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வான மகா கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமார் மூன்றரை கோடி பேர் புனித நீராடியதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 40 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கிய நிகழ்வான அமிர்த குளியல் நேற்று நடைபெற்றது. 3வது நாளாக இன்றும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க மாநில போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.