அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும், 2021-ல் வந்த பெரிய வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி தவற விட்டு விட்டதாகவும் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டியுள்ளார்.
துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய குருமூர்த்தி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில், பா.ஜ.க கொண்டு வருகிறது என்பதற்காகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக அவர் குற்றச்சாட்டினார். மேலும், எம்ஜிஆர் ஜெயலலிதா எப்படி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்களோ, அந்த எண்ணம் அதிமுக தலைமைக்கு இன்று இல்லை என குருமூர்த்தி தெரிவித்தார்.
எனவே, வரும் தேர்தலை எதிர்கொள்ள, அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும், 2021-ல் வந்த பெரிய வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி தவற விட்டு விட்டதாகவும் குருமூர்த்தி தெரிவித்தார்.