நதிகளை இணைக்காமல் பாரத தேசத்தின் நீர் தேவையை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்றும், அப்படி ஒரு வாய்ப்பு பிரதமர் மோடியால் உருவாகும் என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருண்ணன் தெரிவித்தார்.
தியாகராஜர் 178-வது ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சமாதியில் துவங்கியது. இந்த விழாவில், தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 5 நாட்கள் நடைபெறுகிற இந்த விழாவினை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், கரைபுரண்டு ஓடும் கோதாவரியை காவிரியில் இணைக்க வேண்டும் என்றும், டெல்டா மக்கள் ஒரு போதும் நீருக்காக ஏங்க கூடாது எனவும் தெரிவித்தார்.