சபரிமலையில் மகரஜோதி தரிசனம் தெரிந்த அதே நேரத்தில் கும்பகோணம் அய்யப்பன் சுவாமி கோயிலில் 5 கிலோ சூடத்தில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அய்யப்பன் கோயிலில் 20ஆம் ஆண்டாக தை மாதப் பிறப்பினையொட்டி திருவாபரணப் பெட்டிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சபரிமலையில் மகரஜோதி தெரிந்த அதே நேரத்தில் கோயில் வளாகத்தில் 5 கிலோ சூடத்தில் மகரஜோதி ஏற்றப்பட்டது. இதையடுத்து அய்யப்பசுவாமிக்கு மகாதீபாராதனைகள் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.