பிரிட்டன் அமைச்சரும், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினருமான துலிப் சித்திக், அமைச்சரவையிலிருந்து விலகினார்.
லண்டனில் உள்ள ஷேக் ஹசீனாவுக்கு சொந்தமான சொத்துகளை அவர் ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக துலிப் சித்திக் பதவி விலகினார். இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தாம் எந்தவொரு தவறும் செய்யாத போதிலும், தன்னால் பிரிட்டன் அரசுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் பதவி விலகியதாக கூறியுள்ளார்.
துலிப் சித்திக்கின் ராஜினாமா கடிதத்தை கவலையுடன் ஏற்பதாக பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தெரிவித்தார்.