தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகு முத்து மாரியம்மன் கோயிலில் 62ஆம் ஆண்டு திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நிறைவு நாளில் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விரதமிருந்த பெண்கள் பூக்குழி இறங்கி பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடினர். விழாவில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.