புதுக்கோட்டை மாவட்டத்தில் 78 வயது முதியவர் ஒருவர் மிதிவண்டி ஓட்டியவாறு தலையில் கரும்பு கட்டை வைத்துக் கொண்டு 14 கிலோமீட்டர் தூரம் சென்று தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 78 வயது முதியவர் செல்லதுரை. இவரது மகளுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில், செல்லத்துரை கொத்தகோட்டை கிராமத்திலிருந்து வம்பன் கடை வீதிக்கு வந்து பொங்கல் சீர்வரிசை வாங்கி, கரும்பு கட்டை தலையில் வைத்துக் கொண்டு சைக்கிளில் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்பம்பட்டி கிராமத்திற்கு சென்று தனது மகளுக்கு அதைக் கொடுத்தார். இதை கடந்த 17 ஆண்டுகளாக அவர் பின்பற்றி வருகிறார்.