3-வது ஆண்டாக ‘காசி தமிழ் சங்கமம்! : பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது!
Jul 25, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது ஆண்டாக ‘காசி தமிழ் சங்கமம்! : பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.

பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்கக்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

இந்நிகழ்வில் பங்கேற்போருக்காக ஐந்து பிரிவுகளில் விண்ணப்பங்கள் பின்வரும் இணையமுகப்பு வாயிலாக வரவேற்கப்படுகின்றன – http://kashitamil.iitm.ac.in.

பொதுமக்கள் இதில் விண்ணப்பப் பதிவு செய்து கொள்ளலாம்.  இந்நிகழ்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University – BHU) வரவேற்புக் கல்வி நிறுவனமாக செயல்படும்.

இந்த நிகழ்வில் தமிழகத்தின் பங்கேற்பு குறித்து விரிவாக எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது,

“தமிழ்நாட்டில் இருந்து ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சம எண்ணிக்கையில மொத்தம் 1,000 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வேளாண் விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் பெண்களும், ஆராய்ச்சியாளர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 200 தமிழ் மாணவ-மாணவிகளைக் கொண்ட குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்று வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற இடங்களை உள்ளூர் அளவில் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, 2025 ஜனவரி 13-ந் தேதி முதல் பிப்ரவரி 26-ந் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவுடன் இணைந்து இந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

காசி தமிழ் சங்கமத்தின் பிரதிநிதிகள் மகா கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடல் வாய்ப்பைப் பெறுவதுடன், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலிலும் தரிசனம் செய்யவிருக்கின்றனர்.

சித்த மருத்துவ முறை (பாரதிய மருத்துவ முறை), பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதுதான் காசி தமிழ் சங்கமத்தின் இந்த ஆண்டுக்கான முக்கிய கருப்பொருளாகும்.

அகத்தியர் என்ற ஆளுமையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், கலாச்சாரம், கலை, குறிப்பாக தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கு அகத்தியர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்போது, இத்தலைப்புகளில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாரணாசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உயிரோட்டமான பிணைப்புகளை மீட்டெடுக்கும் வகையில் அரசு சார்பிலான அணுகுமுறையாக, 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு முதலாவது காசி தமிழ் சங்கமம் நடைபெற்றது.

2023 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30 தேதி வரை இதன் இரண்டாவது நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு, உத்தரப் பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், தற்போது மூன்றாவது நிகழ்வுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பங்கேற்பாளர்கள், தமிழ்க்கவி சுப்ரமணிய பாரதியாரின் பழங்காலத்து இல்லம், கேதார் காட், காசி மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிடுவதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ்த் துறையில் கல்வி- இலக்கியம் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: kashi varanasi tamilkasi tamil sangamamkashi tamil samagamtamil newscentral goverment kashi tamil sangamKashi Tamil Sangamkasi tamil sangam 2022For the 3rd yearpm modi to inaugurate kashi tamil sangamamStarts from 15th Februarykasi tamil sangamam trainkashi tamil sangamamcentre launch tamil kashi sangamam programmekashi tamil sangamam 2022kashi tamil sangamam 2023kashi tamil sangamam in varanasitamil helpline kashikashi tamil sangamam programmekashi tamil sangam registration
ShareTweetSendShare
Previous Post

மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!

Next Post

சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அழைப்பு!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies