காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவை - தொடங்கி வைத்தார் தர்மேந்திர பிரதான்!
Jul 7, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்ட பதிவிற்கான இணையதள சேவை – தொடங்கி வைத்தார் தர்மேந்திர பிரதான்!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி தமிழ் சங்கமத்தின்  3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 15-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார்.

10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 2025 பிப்ரவரி 24- ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், 2025 பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

தமிழகம் – காசி இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்டத்தின்  மூலம் மீண்டும் உயிர் பெறும் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கமம், தமிழ்நாடு – காசி இடையேயான காலத்தால் அழியாத பிணைப்பை கொண்டாடவும், நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தவும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்தவும் உத்வேகம் அளிப்பதற்கான முயற்சியாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் தனிச் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும், அயோத்தியில் ஸ்ரீ ராம் லல்லாவின் ‘பிராண பிரதிஷ்டாவுக்கு’ பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இது என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார். காசி தமிழ்ச் சங்கமம் 3-வது கட்டத்தில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அகத்திய முனிவரின் பல்வேறு பரிமாணங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை, குறிப்பாக தமிழ்நாடு ஆகிய துறைகளில் அவர் அளித்த அளப்பரிய பங்களிப்புகள் குறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சகத்தின் செயலாளர்  சஞ்சய் குமார், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரேந்திர ஓஜா, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சுனில் குமார் பர்ன்வால், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் திரு சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட  பிற உயரதிகாரிகளும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags: dharmendra pradhanKashi Tamil Sangam 3rd phase registration
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர்! : குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவில்லை என புகார்!

Next Post

பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பெண்!

Related News

கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – தண்ணீர் மூழ்கிய கோயில்கள்!

இந்தி மொழியை எதிர்க்கவில்லை – முதல்வர் ஸ்டாலினுக்கு சிவசேனா பதில்!

தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பியூஷ் கோயல்!

உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்ட கனமழை!

ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

12 நாடுகளுக்கு வரி விதிப்பு – கடிதங்களில் கையெழுத்திட்ட டிரம்ப்!

நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வ.உ.சி கனவு கண்ட சுதேசி இயக்கத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் – எல்.முருகன்

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் – கோப்பையை கைப்பற்றிய திருப்பூர் தமிழன்ஸ் அணி!

இருள் நீங்கி மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் – எல்.முருகன்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !

47 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies