தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
அருணாச்சலபிரதேசத்தின் நாகர் லகுன் இரண்டாவது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. சண்டிகர், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், இமாச்சலபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.