அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
AI உருவாக்கிய செயற்கை உள்ளடக்கத்தை சரியான முறையில் வெளிப்படுத்தவும் லேபிளிடவும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நியமாகவும், பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஆலோசனையை கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.