முல்லைப்பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்பு குழுவை அமைத்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அணை பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின், முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
மேலும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அணைகள் ஆய்வு அதிகாரி ஒருவரும் உறுப்பினராக இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.