நீலகிரி அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி கூண்டில் சிக்கியது.
கேரள மாநிலத்தின் புல்பள்ளி அமரகுனி கிராமம், நீலகிரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக கால்நடைகளை, புலியொன்று வேட்டையாடி வந்தது.
இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கேரள மற்றும் கர்நாடகா வனத்துறையினர் இணைந்து புலியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் புலி பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.