தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார்.
இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அமைச்சர் பொன்முடியின் சட்டையில் சேறு பட்டதற்காக, இருவேல்பட்டு கிராம மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய கொடூர தாக்குதல் தொடர்பாக புகார் அளித்ததாக தெரிவத்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் பெண்களின் மாண்பினை குலைக்கும் வகையில் அரங்கேறிய சம்பவங்களை செய்தவர்கள் மற்றும் அவற்றிற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.