ஈரோடு அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி இன்ஸ்டா பிரபலம் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார்.
கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இன்ஸ்ட்கிராமில் காமெடி வீடியோவை பதிவு செய்து சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட ஃபாலோவர்ஸை வைத்துள்ள இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு ராகுல், தனது இருசக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாலத்தின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
தலைக்கவசம் அணியாமல் சென்றதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.