ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன.
ஈரோட்டில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இறுதி நாளான நேற்று திமுக சார்பில் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது ஏராளமான போலீசார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன,.