மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் 2025 -ஆம் ஆண்டு வரை அஸ்ட்ரோ என்ற மோப்ப நாய் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், வயது முதிர்வால் உயிரிழந்தது.
இறந்த மோப்பநாய் உடல், மத்திய சிறையில் உள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறைத்துறை டிஐஜி முருகேசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.