தமிழகத்தில் பொங்கல் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது
தமிழக அரசு வழங்கிய பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகிய பொருட்கள் இடம்பெற்ற நிலையில் அவை இம்மாதம் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வினியோகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பரிசுத்தொகுப்பை 85 சதவீத ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் மட்டுமே வாங்கியுள்ளதாகவும், சுமார் 33 லட்சம் பேர் வாங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பொங்கல் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாததே, மக்கள் பரிசுத்தொகுப்பை வாங்க ஆர்வம் காட்டாததற்கு காரணம் என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.