நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி டிப்பர் லாரியில் சக்கரத்தின் அருகே விழுந்து நூலிலையில் உயிர்த்தப்பிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கூடலூர் நகரில் வழக்கமாக கனரக வாகனங்கள் சென்று கொண்டுடிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியை முந்தி செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது பின்னே வந்த டிப்பர் லாரியின் சக்கரத்தின் அருகே விழுந்த அந்த நபர் நூலிலையில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.