தஞ்சாவூரில் காணாமல் போன பள்ளி மாணவி வெண்ணாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெபமாலைபுரம் அருகேயுள்ள பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் தனது தோழி வீட்டுக்கு செல்வதாகக் கூறி, கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், நெடுநேரம் ஆகியும் புவனேஸ்வரி வீடு திரும்பாததால், அவரது சித்தப்பா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் மாணவி புவனேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். இவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.