ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேடுபறி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளையொட்டி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வு களைகட்டியது. சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு அருகில் உள்ள மணல்வெளியில் வையாளி கண்டருளினார்.
திருப்பணி செய்வதற்காக கொள்ளையில் ஈடுபட்ட திருமங்கை மன்னனுக்கு நம்பெருமாள் அருள்பாலித்து திருத்திய நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் இந்த விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று நமோ நாராயணா என பக்தி முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர்.