கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியால்டா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர், மர்மமான முறையில் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்த சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சீல்டா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தெரிவித்த நீதிமன்றம், தண்டனை விவரம் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என கூறினார்.
இந்த வழக்கில் தான் தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றத்தை தான் செய்யவில்லை என தெரிவித்தார். இந்த குற்ற சம்பவத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியும் உள்ளதாக அவர் வாதிட்டார்.