காலிங்கராயர் வாய்க்காலை மக்களுக்கு அர்ப்பணித்தவர் மன்னர் காலிங்கராயர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பவானி, நொய்யல் நதிகளை இணைக்க, வெட்டப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று.
சுமார் 90 கிமீ நீளமுள்ள இந்த வாய்க்காலை அமைத்த மன்னர் காலிங்கராயர் பெயரால், காலிங்கராயர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சுமார் 740 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் உலக அளவில் மிகப் பழமையான பாசன வாய்க்கால் என்ற பெருமைக்குரியது காலிங்கராயன் வாய்க்கால்.
தமிழகத்தின் பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடாக விளங்கும் காலிங்கராயர் வாய்க்காலை மக்களுக்கு அர்ப்பணித்த மன்னர் காலிங்கராயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.