அமெரிக்காவில் டிக் டாக் செயலி தனது சேவைகளை நிறுத்திக்கொண்டுள்ளது.
டிக் டாக் செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு இயற்றிய சட்டத்தை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஆனால், அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், டிக் டாக்கிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், அவர் பதவியேற்றபின் இந்த தடை உத்தரவில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.