சென்னை சோழிங்கநல்லூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த கலைகுமார், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் வந்த வாகனங்களை சோதனையிட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.