அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா : உள்ளரங்கில் நடைபெறுவது ஏன்? - சிறப்பு தொகுப்பு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா : உள்ளரங்கில் நடைபெறுவது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 19, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அதிபர் பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தாமல்,உள்ளரங்கில் நடத்தப் படுகிறது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் திங்கள் கிழமை அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

பொதுவாக,அதிபர் பதவி ஏற்பு விழா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் அருகே பொதுவெளியில் நடப்பது வழக்கம். ஆனால் , இம்முறை, நாட்டில் கடும் குளிர் நிலவுகிறது. குளிரால் மக்கள் பாதிப்படைவதைக் காண விரும்பாததால், பதவி ஏற்பு விழாவை பொதுவெளியில் நடத்தப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவி ஏற்பு விழா மூடிய திடலில் நடக்கிறது. 1985 ஆம் ஆண்டில்,முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் பதவி ஈர்ப்பின் போது மைனஸ் 7 செல்ஸியஸ் என்ற அளவில் இருந்தது. அப்போதும் மூடிய திடலில் தான் பதவி ஏற்பு விழா நடந்தது. ட்ரம்ப் பதவி ஏற்கும் நாளில்,வெப்ப நிலை மைனஸ் 6 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது.

முன்னதாக, 1841 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 9வது அதிபர் வில்லியம் ஹாரிசன் பதவி ஏற்ற நாளிலும் கடுமையான குளிர் காற்று வீசிய நிலையிலும் அவர், பொதுவெளியில் பதவி ஏற்றார். துரதிர்ஷடமாக பதவி ஏற்ற ஒரு மாதத்துக்குள்ளாகவே நிமோனியாவில் உயிரிழந்தார். வில்லியம் ஹாரிசன் தான், அமெரிக்காவில் மிக குறைந்த காலம் அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

பதவியேற்பு நாளான திங்கள் கிழமை,வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் காலை ஆராதனையில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, நாடாளுமன்ற உள்ளரங்கில் , அதிபராக ட்ரம்பும், துணை அதிபராக ஜெ.டி .வான்ஸும் பதவி ஏற்று கொள்கிறார்கள்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் டிரம்ப், மறைந்த தனது தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்பிறகு, தனது முதல் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவதற்காக கேபிடல் கட்டிடத்தில் உள்ள அதிபர் மாளிகைக்கு செல்வதற்கு முன் நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் உரையாற்றுகிறார். டிக்கெட் வாங்கிய நபர்களுக்கு நேரடி ஒளிபரப்புகளைக் காண உள்ளரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: trump inaugurationtrump jrtrump oath taking cermonyindoor ceremonyDonald TrumpUnited StatesTrumptrump news
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது!

Next Post

அமெரிக்கா மீண்டும் தலைசிறந்த நாடாக உருவெடுக்கும் : டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies