ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளராக செந்தில் முருகன் என்பவர் பொறுப்பு வகித்தார். இவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தார்,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்த நிலையில், செந்தில் முருகனின் நடவடிக்கை கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கட்சி உத்தரவை மீறி செயல்பட்டதால் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.