சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் ஜனவரி 26ம் தேதி 76வது குடியிரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் முப்படை வீரர்கள், காவல்துறையினர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.