அமெரிக்க அதிபராக பதவியேற்ற நூறு நாளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டொனால்ட் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல சீனாவிலும் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்கா, சீனா உறவை வலுப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் பிரதமர் மோடியை அமெரிக்காவுக்கு அழைக்கவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சென்றபோது பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.