டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பணப் பட்டுவாடா செய்ததாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் வெர்மா தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.