புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி சென்றிருந்தார்.
இந்த டிராக்டரை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இது குறித்து தியாகராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வரதராஜன் என்ற இளைஞரை கைது செய்து டிராக்டரை மீட்டனர்.