நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளதால் தொழிற்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக உள்ள நூலின் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டில் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான 2ஆம் பாதி நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு 7 ரூபாய் குறைந்துள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.