சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு செல்வகுமார் என்ற விசிக பிரமுகர் குடியிருந்து வருகிறார். அவர், மொட்டை மாடியில் அனுமதியின்றி ஷெட் அமைத்துள்ளார்.
இதனை தட்டிக்கேட்ட உரிமையாளரை தனது ஆதரவாளர்களுடன் சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான செல்வகுமார் உள்ளிட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.