ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஜவுளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 200 சேலைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டபோது இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான குணசேகரன் என்பவரிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உரிய ஆவணமின்றி ஜவுளிகள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பண்டல்களில் எடுத்து வரப்பட்ட 200 சேலைகள் உள்ளிட்ட ஜவுளிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.