சென்னை எப்சி நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை மாணவர்கள் காணும் வகையில், ஒவ்வொரு போட்டிக்கும் 2 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை எப்சி, நார்விச் சிட்டி எப்சி-யுடன் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து தொடரின் முதல் சீசன், சென்னையில் வரும் 24ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இகு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
அப்போது பேசிய சென்னை எப்சி கிளப்பின் சந்தைப்படுத்துதல் தலைவர் நீல் ஜெயராம், ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு எப்சி-ன் ஜூனியர் அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறினார்.