திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாளை 23ஆம் தேதி அதிகாலை முதல் மீண்டும் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசம், ரயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாஸம், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய கட்டிட வளாகங்களில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.