தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்வதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மணப்பாறை தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர்களுடன் திருப்பரங்குன்றத்தில் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் ஆய்வு செய்யும் அளவிற்கு அப்துல் சமது அமைச்சரும் இல்லை, அது அவர் தொகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், இது திட்டமிட்ட சதி என்பது அப்பட்டமாக தெரிந்தும் காவல்துறை அதிகாரிகள் அவர்களை அனுமதித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரத்தை முஸ்லிம் அமைப்புகள் போட்டி போட்டு கொண்டு பிரச்னையாக்க முயல்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்தும் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக தெரிவித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டும் செயலுக்கு திமுக அரசு துணை போவதாக குற்றம்சாட்டியுள்ளார்