ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள் தான் என தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பகுதியில் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் மற்றும் கணித ஆய்வகம் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் ஸ்டெம் ஆய்வகத்தினை திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த பிரஷோப குமாருக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய பிரஷோப குமார்,
முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள்தான் என தெரிவித்தார்.
மேலும், நமது அறிஞர்கள் பல்வேறு உலக நாடுகளுக்கும் நமது ஆராய்ச்சியை கடனாக அளித்துள்ளனர் என தெரிவித்த பிரஷோப குமார் இந்த ஸ்டெம் ஆய்வகம் மூலம் அறிஞர்கள் பலர் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.