வண்டலூர் அருகே மதுபான பார் ஊழியர்களை, ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான கூடத்தில் ரவுடிகள் சிலர் மது அருந்து சென்றனர். மது குடித்துவிட்டு ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்ட ரவுடி கும்பல், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
மேலும், மதுபான கூடத்தில் பணியாற்றும் ஊழியர்களை சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், படுகாயம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.