ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்ற 25 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழகக் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி, இந்தியக் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும், தமிழகக் காவல்துறை சகோதரர்கள் 25 பேருக்கும், தமிழக பாஜக சார்பாக, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துளளார்.
விருப்பு வெறுப்பு பாகுபாடின்றி, தேசப் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.