அமெரிக்க செயல்திறன் துறையில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விவேக் ராமசாமி விலகியதற்கு எலான் மஸ்க்கே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் அரசாங்க திறன் துறையை (DOGE) இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகிய இருவரும் கவனித்து வந்தனர். அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே, திறன் துறையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்தார்.
இந்த நிலையில், விவேக் ராமசாமி வெளியேற, எலான் மஸ்க் தான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சியினருக்கு எதிரான விவேக் ராமசாமியின் செயல்பாடுகளால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும், எலான் மஸ்க், அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையேயான நெருக்கத்தால் இது சாத்தியப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.